திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை


திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை
x

திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சுரேஷ் (வயது 38). இவர் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சுரேஷ் கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார். அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட அவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கடம்பத்தூரில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையோரம் புதுமாவிலங்கை பகுதியில் சாலையோரம் தனது மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தான் ஏற்கனவே கொண்டு வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனனுடைய உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் அவர் உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சுரேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து கடம்பத்தூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயில் கருகிய சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story