மதுரையில் ஒரு கையால் தட்டச்சு தேர்வு எழுதி சாதித்த மாற்றுத்திறனாளி மாணவி


மதுரையில் ஒரு கையால் தட்டச்சு தேர்வு எழுதி மாற்றுத்திறனாளி மாணவி சாதனை படைத்தார்.

மதுரை


மதுரையில் ஒரு கையால் தட்டச்சு தேர்வு எழுதி மாற்றுத்திறனாளி மாணவி சாதனை படைத்தார்.

தட்டச்சு தேர்வு

தமிழகம் முழுவதும் நேற்று தட்டச்சு தேர்வு நடந்தது. மதுரையில் தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆண்கள், பெண்கள் கல்லூரி, மதுரை கல்லூரி, கே.எல்.என் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ஆர்வத்துடன் ஏராளமானவர்கள், கலந்து கொண்டு தட்டச்சு தேர்வினை எழுதினர். தட்டச்சு தேர்வு குறித்து மாவட்ட தலைவர் மனோகரன் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் மேலூர் 445 பேர், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி 1944 பேர், கே.எல்.என். கல்லூரி 1672 பேர், பாலிடெக்னிக் பெண்கள் கல்லூரி 2267 பேர், செக்கானூரணி 936, தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி 1020, அழகர்கோவில் பாலிடெக்னிக் கல்லூரி 1299 பேர், மதுரை கல்லூரி 985 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 568 பேர் இந்த தேர்வினை எழுதினர்.

தமிழ்நாட்டில் 1 லட்சத்து 75 பேர் தேர்வு எழுதி உள்ளனர். கடந்த முறையை காட்டிலும் இந்த முறை குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுதினர். குறுகிய கால இடைவெளியில் தட்டச்சு தேர்வினை நடத்தியதால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையில் 2 மடங்காக உயரும் என அவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி மாணவி

இதற்கிடையே, மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி முருகேஸ்வரி என்பவர் ஒரு கையில் தட்டச்சு செய்து அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பட்டப்படிப்பு படித்துள்ளேன். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல முயன்றும் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டேன். இதனால், ஒரு தனியார் தட்டச்சு நிறுவனத்தில் பயிற்சிக்காக சேர்ந்து கடுமையாக பயிற்சி பெற்றுவிட்டு தேர்வு எழுத வந்திருக்கிறேன். இதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். என்னை போல் உள்ள மற்ற மாற்றுத்திறனாளிகளும் தங்கள் திறமையை வெளிக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story