கோவிலில் அன்னதானம் வழங்கியதில் தகராறு; 3 பேர் மீது வழக்கு


கோவிலில் அன்னதானம் வழங்கியதில் தகராறு; 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் அன்னதானம் வழங்கியதில் தகராறு; 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன்(வயது 32). விவசாயியான இவர், கடந்த 19-ந் தேதி அமாவாசையன்று தனது நேர்த்திக்கடனுக்காக அதே கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது கூட்டம் அதிகமாகியதால் பலர், உணவு இருந்த பாத்திரத்திற்குள் கையை விட்டு எடுக்க முயன்றனர். இதனால் ஜனார்த்தனன், அந்த பாத்திரத்தை மூடியுள்ளார். அதற்கு அதே கிராமத்தை சேர்ந்த சிவசங்கரனின் மகன் அஜய் என்பவர், ஏன் பாத்திரத்தை மூடினாய் எனக்கேட்டு வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன் பிறகு அஜய், இதுபற்றி தனது தந்தை சிவசங்கரனிடம் கூறினார். உடனே சிவசங்கரன், சரத், சதீஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஜனார்த்தனன், அவரது மாமா அய்யப்பன் ஆகிய இருவரையும் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து ஜனார்த்தனன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சிவசங்கரன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story