வழியில் தோண்டப்பட்ட பள்ளம்


வழியில் தோண்டப்பட்ட பள்ளம்மாற்று வழி ஏற்படுத்த கோரிக்கை.

திருப்பத்தூர்


திருப்பத்தூர் நகராட்சி 30-வது வார்டு புதுப்பேட்டை ரோடு ரெயில்வே தரைப் பாலத்தின் வழியாக ஏரி நீர் செல்வதை தடுப்பதற்காக சிவசக்தி நகர் வழியாக பொதுமக்கள் பயன்படுத்தும் வழியை நகராட்சி நிர்வாகம் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வழி இல்லாமல் பள்ளத்தை தாண்டி செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக பாதை வசதியை உடனே ஏற்படுத்தி தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story