கடலூரில் வீட்டின் இரும்பு கேட்டில் சிக்கிய நாய்


கடலூரில் வீட்டின் இரும்பு கேட்டில் சிக்கிய நாய்
x

கடலூரில் வீட்டின் இரும்பு கேட்டில் நாய் சிக்கியது.

கடலூர்

கடலூர் செம்மண்டலம் தீபன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிந்தன. அதில் ஒரு நாய், அங்குள்ள வீட்டுக்குள் செல்ல முயன்றது. அப்போது வீட்டின் முன்பக்கமுள்ள இரும்பு கேட் மூடப்பட்டிருந்ததால், அதில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே செல்ல முயன்றது. இதில் நாயின் தலை உள்ளே சென்ற நிலையில், உடல் கேட்டில் உள்ள கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. அதில் இருந்து வெளியே செல்ல முடியாமல் நாய் குரைத்துக் கொண்டே இருந்தது.

இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் விரைந்து வந்தார். பின்னர் நாயின் வாயில் கயிற்றால் கட்டினார். தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் கொஞ்சம், கொஞ்சமாக அந்த இரும்பு வளையத்தில் இருந்து தெருநாயை விடுவித்தனர். உடனே அந்த நாய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து தலைத்தெறிக்க ஓடியது.


Next Story