வேடசந்தூரில் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை


வேடசந்தூரில் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 2 July 2023 2:30 AM IST (Updated: 2 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 40). சரக்கு வேன் டிரைவர். இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் காளிதாஸ் தனது பாட்டி சுப்பம்மாள் (வயது 85) வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி அன்று காளிதாஸ் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததார். இதனை அவரது பாட்டி கண்டித்தார். இதில், ஆத்திரமடைந்த காளிதாஸ், தனது பாட்டியை அடித்து கொலை செய்தார்.

இதுகுறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காளிதாஸ், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த கொலை வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் தனக்கு தண்டனை நிச்சயமாக கிடைக்கப்போகிறது என்றும், இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றும் அக்கம்பக்கத்தினரிடம் காளிதாஸ் கூறி வந்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, காளிதாஸ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story