தேனி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை


தேனி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 May 2023 2:30 AM IST (Updated: 25 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தேனி

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 79). இவர் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் மயங்கிக்கிடந்தார். இதனை பார்த்த அவருடைய மகன் பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சண்முகத்தின் அருகில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கிடந்தது.

இதனால், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை அறிந்த பாலமுருகன், தனது தந்தையை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சண்முகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இந்த தற்கொலை குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story