சாலையில் முறிந்து விழுந்த மரம்
வேடசந்தூர் அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்தது.
வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில், வடமதுரை சாலையின் இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்தநிலையில் நேற்று மாலை பூத்தாம்பட்டி அருகே வடமதுரை சாலையில் இருந்த மரத்தின் பெரிய மரக்கிளை திடீரென்று முறிந்து சாலையில் விழுந்தது. மரக்கிளை விழுந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளையை வெட்டி அகற்றினர். மரக்கிளை விழுந்ததால் வேடசந்தூர்-வடமதுரை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மரக்கிளை அகற்றப்பட்டதை தொடர்ந்து அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன.