தாலுகா அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயி


தாலுகா அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயி
x
தினத்தந்தி 29 Jun 2023 1:00 AM IST (Updated: 29 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த விவசாயி தாலுகா அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

தேனி

போடி அருகே உள்ள கீழச்சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 63). விவசாயி. இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். பின்னர் போலீசில் புகார் கொடுத்தார். அதனை போலீசார் மூலம் அவர் மீட்டார். இந்த நிலையில் அந்த இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து சிலர் வேலி அமைத்தனர். இதுகுறித்து தாலுகா அலுவலகத்திலும், போலீசிலும் பல முறை முத்துராஜ் புகார் கொடுத்தார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முத்துராஜ் போடி தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நுழைவுவாயில் முன்பு திடீரென்று தான் கொண்டு வந்த பையில் பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து அவர் உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். உடனே அங்கு இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இது குறித்து தகவலறிந்து போடி நகர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் முத்துராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story