மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி படுகாயம்
முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி படுகாயம் அடைந்தார்.
முத்துப்பேட்டை:
வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமம் நடுசேத்தி பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆதிவன் (வயது55).விவசாயியான இவர் தனது பேரன் துரைராமன் (11) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கரையங்காடு மெயின்ரோட்டில் சென்ற போது முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யத்தை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்தில் ஆதிவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் துரைராமனுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த முத்துப்பேட்டை கிட்டங்கி தெருவை சேர்ந்த காதர் முகைதீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.