செல்போன் பேசியபடி சென்ற விவசாயி மின்னல் தாக்கி பலி


செல்போன் பேசியபடி சென்ற விவசாயி மின்னல் தாக்கி பலி
x

செல்போன் பேசியபடி சென்ற விவசாயி இடி-மின்னல் தாக்கியதில் இறந்தார்.

பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெயில் வாட்டி எடுக்கிறது. இதேபோல் நேற்று காலையிலும் நெல்லையில் கடும் வெயில் அடித்தது. மதியம் 2 மணியளவில் வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் நீடித்தது. இந்தநிலையில் மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் இறந்தார்.

குளிக்க சென்றவர்

அம்பை அருகே தோணித்துறையைச் சேர்ந்த சீவலமுத்து மகன் சின்னராஜா (வயது 36). விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி தங்கமாரி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று மாலையில் வீட்டிலிருந்து அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் அழைப்பு வரவே எடுத்து பேசும்போது, திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story