தாமதமாக வந்த அதிகாரிகளுக்கு தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்த விவசாயி...


தாமதமாக வந்த அதிகாரிகளுக்கு தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்த விவசாயி...
x

அதிகாரிகளுக்கு கண் திருஷ்டி வந்துவிடக்கூடாது என்று, விவசாயி ஒருவர் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கோட்டாட்சியர் மற்றும் செங்கம் வட்டாட்சியர் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்றைய ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு துறை சார்ந்த அதிகாரிகள் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து, தாம்பூலத்தை எடுத்துச் சென்று கோட்டாட்சியர் இருக்கையின் முன் வைக்கப்பட்டு நூதனமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும், கண் திருஷ்டி வந்துவிடக்கூடாது என்றும் கூறி, விவசாயி ஒருவர் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story