நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது


நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது
x

ஆலங்காயம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள குண்டுரெடியூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆலங்காயம் வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் சுற்றித் திரிவதை பார்த்த வனத்துறையினர், அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த விவசாயி நாராயணன் (வயது 52) என்பதும், நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், அவரை கைது செய்தனர். மேலும், அவர் விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, வெடி மருந்துகள், உதிரி பாகங்கள், டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நாராயணனை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story