உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்த விவசாயி


உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்த விவசாயி
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த விவசாய உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயடைந்த அவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அருகே மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த விவசாய உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயடைந்த அவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விவசாயி

கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த போலையா நாயக்கர் மகன் பாலமுருகன் (வயது 55). விவசாயி. இவருக்கு ராஜேஸ்வரி (48) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

மதுகுடிக்க பணம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாலமுருகன் மனைவி ராஜேஸ்வரியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் மது குடிக்க பணம் தர மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

தீக்குளிப்பு

திடீரென்று வீட்டில் கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி கண்இமைக்கும் நேரத்தில் தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அவர் அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் தீயை அணைத்து பலத்த தீக்காயங்களுடன் மீட்க்கப்பட்டார்.

அவரது உறவினர்கள் உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story