பழுதடைந்த மின்மாற்றியை அகற்ற வேண்டும்
பூம்புகார் அருகே பழுதடைந்த மின்மாற்றியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
பூம்புகார் அருகே பழுதடைந்த மின்மாற்றியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழுதடைந்த மின்மாற்றி
பூம்புகார் அருகே நெய்தவாசல் வடபாதி மற்றும் தென்பாதி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்வதற்கு என தனியாக ஒரு மின்மாற்றி உள்ளது.
இந்த மின்மாற்றி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பழுதடைந்து காணப்படுகிறது. இதில் உள்ள மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
அகற்ற வேண்டும்
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இந்த பழுத டைந்த மின்மாற்றி கடற்கரையையொட்டி அமைந்துள்ளது. மழை பெய்யும் போதும், பலத்த காற்று வீசும் போதும் மின்மாற்றி சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மின்மாற்றி சேதமடைந்துள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு பழுத டைந்த மின்மாற்றியை அகற்றி விட்டு புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.