திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஒரே நேரத்தில் 1008 சங்குகள் முழங்கும் விழா
திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஒரே நேரத்தில் 1008 சங்குகள் முழங்கும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஒரே நேரத்தில் 1008 சங்குகள் முழங்கும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பவுண்டேஷன் சார்பில் உலக நன்மைக்காக 1008 சங்கு முழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி அங்கு அருணாசலேஸ்வரருக்கு மகா குபேர லஷ்மியாகம் நடைபெற்றது. மேலும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் ஒரே நேரத்தில் 1008 சிவனடியார்கள் மற்றும் சாதுக்கள் ஒன்றிணைந்து சங்கொலி முழங்கும் சாதனை விழாவை நடத்தினர்.
முன்னதாக பரதநாட்டியம், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒரே நேரத்தில் 1008 சங்கு முழங்கிய நிகழ்வுக்கு யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை சான்று வழங்கப்பட்டது. மாலையில் ராஜகோபுரம் அருகிலிருந்து தனியார் பவுண்டேஷன் சார்பில் கிரிவலம் நடைபெற்றது. அப்போது கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து லிங்கங்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திருவண்ணாமலை வஜ்ர வராகி பீடம் நிர்வாகிகள், பவுண்டேஷன் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.