ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து நிதி நிறுவன ஊழியர் பலி


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து நிதி நிறுவன ஊழியர் பலி
x

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து நிதி நிறுவன ஊழியர் பலியானார்.

திருப்பத்தூர்

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40), பஞ்சாப் மாநிலத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார். இந்தநிலையில் வேலைக்கு செல்வதற்காக கடந்த 23-ந் தேதி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோயம்புத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தாமலேரிமுத்தூர் பகுதியில் ரெயில் சென்றபோது சீனிவாசன் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது மனைவி ஜோதிமணி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story