பறவைகளை வேட்டையாடிய வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
வேதாரண்யம் அருகே பறவைகளை வேட்டையாடிய வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரையில் பறவை வேட்டையாடுவதை தடுக்க தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா ஆகியோர் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான், தலைமையில் வனவர்கள் ராமதாஸ், மகாலெட்சுமி, வனக்காப்பாளர் ரணீஷ்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம் அருகே தலக்காட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது30) என்பவர் மூலக்கரை வயல்வெளியில் வளைவைத்து 2 மடையான் பறவைகளை வேட்டையாடியது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவருக்கு அபராதமாக ரூ.15 ஆயிரம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story