சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்


சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு  ரூ.2 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் சாலைகளில் திரியும் ஆடு மற்றும் மாடுகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்துள்ளார்கள்.எனவே நகர்ப்பகுதியில் கால்நடை வளர்போர்கள் தங்களிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்திக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு அப்புறப்படுத்தாவிட்டால் நகராட்சியால் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துவதுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது முதல் முறையாக ரூ.2 ஆயிரமும் மறுமுறை என்றால் ரூ.5 ஆயிரம் என அபராத தொகை விதிக்கப்படும். மேலும் மாடுகள் கோசாலையில் அடைக்கப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story