9 கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

9 கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்
x

மார்த்தாண்டத்தில் குழித்துறை நகராட்சி அதிகாரிகள் கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 9 கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் குழித்துறை நகராட்சி அதிகாரிகள் கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 9 கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கடைகளில் சோதனை

குழித்துறை நகராட்சி பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் அதிகாரிகள் மார்த்தாண்டம் சந்திப்பு, மார்க்கெட் ரோடு, வடக்குத்தெரு போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 9 கடைகளில் இருந்து 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ரூ.40 ஆயிரம் அபராதம்

மேலும் அந்த கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர். குழித்துறை நகராட்சி பகுதிகளில் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனையால் மார்த்தாண்டம் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story