மான் இறைச்சியை எடுத்துச்சென்ற வாலிபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
மான் இறைச்சியை எடுத்துச்சென்ற வாலிபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்
பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் தலைமையில் வனவர் அண்ணாமலை, வனகாப்பாளர் புருஷோத்தமன் மற்றும் வனத்துறையினர் சாத்கர் வனப்பகுதி கொண்டம்பல்லியில் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் வனப்பகுதியில் பக்கெட்டுடன் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பேரணாம்பட்டு அருகே கோட்டைச் சேரி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பதும், நாய்கள் கடித்து இறந்து கிடந்த மான் இறைச்சியை அருகிலுள்ள தனது சகோதரி வீட்டிற்கு எடுத்து சென்றதும் தெரிய வந்தது.
அவரிடமிருந்து 2 கிலோ மான் இறைச்சியை பறிமுதல் செய்து, வேலூர் மண்டல வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அதிகாரி பிரின்ஸ் குமார், உதவி வன பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் மணிகண்டனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story