சாலையோரம் குப்பை கொட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


சாலையோரம் குப்பை கொட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x

சாலையோரம் குப்பை கொட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரம் ஒருவர் ஆட்டோவில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டினார். அவருக்கு அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கொணவட்டம் தேசிய நேடுஞ்சாலையோரம் மருத்துவகழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் முருகன், மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சவுந்தர்யா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குப்பை கொட்டியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.


Next Story