வாலிபருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்
வாலிபருக்கு ரூ.12 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் பதிவிட்டு வந்த இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த காட்சியை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர் சிக்கினார். அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவருக்கு ஆபத்தாக வாகனம் ஓட்டியது, தலைகவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய விதிமீறல்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாத நபர்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த இளைஞரின் பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.