கோழிக்கழிவு ஏற்றி வந்த டெம்போவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
கோழிக்கழிவு ஏற்றி வந்த டெம்போவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
ஆரல்வாய்மொழி:
கோழிக்கழிவுகளை ஏற்றிய மினி லாரி ஒன்று நாகர்கோவில்-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே உஷாரான நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்று வெள்ளமடம் அருகே உள்ள லாயம் விலக்கு பகுதியில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு ெடம்போவை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் கோழி கழிவுகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. பின்னர், டெம்போ பறிமுதல் செய்யப்பட்டு ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆரல்வாய்மொழி பேரூராட்சியிடம் டிரைவரை ஒப்படைத்தனர். விசாரணையில், களியக்காவிளையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு பன்றி பண்ணைக்கு கோழிக்கழிவுகள் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் கோழிக்கழிவுகள் ஏற்றிவந்த டெம்போவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது. பின்னர், கோழிக்கழிவுகள் கொண்டு வரப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது.