ஆற்காட்டில் இருந்த வாகனத்துக்கு சென்னையில் அபராதம் விதிப்பு


ஆற்காட்டில் இருந்த வாகனத்துக்கு சென்னையில் அபராதம் விதிப்பு
x

ஆற்காட்டில் இருந்த வாகனத்துக்கு செய்யாறு லாரி உரிமையாளருக்கு சென்னையில் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு

ஆற்காட்டில் இருந்த வாகனத்துக்கு செய்யாறு லாரி உரிமையாளருக்கு சென்னையில் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுனில் வசித்து வருபவர் பிரசாந்த். இவருக்கு சொந்தமான லாரி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருக்கும்போது சென்னையில் விதிமீறல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லாரி உரிமையாளர் பிரசாத் கூறியதாவது:-

சென்னை மாதவரம் பகுதியில் கடந்த மாதம் 31-ந் தேதி காலை 10.30 மணியளவில் ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் சீட் பெல்ட் அணியாமலும், பாதுகாப்பில்லாமலும் பயணிகளை ஏற்றிச் சென்று மோட்டார் வாகன விதிகளை மீறியதாக ரூ.1000 அபராதம் விதித்து எனது செல்போனுக்கு அதிநவீன தொழில்நுட்ப கேமரா அறிவிப்பு சோதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சென்னைக்கு செல்லவில்லை

அபராதம் விதிக்கப்பட்ட தேதியன்று எனது லாரி சென்னை பகுதிக்கு செல்லவில்லை. கடந்த 30-ந் தேதி மாலை புதுச்சேரியில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிற்கு சென்று 31-ந் தேதி லோடு இறக்கிவிட்டு செய்யாறுக்கு வந்தேன்.

ஆற்காட்டில் இருந்து லாரிக்கு சென்னையில் விதிமீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த குறுஞ்செய்தியில் விதிமீறியபோது அந்த இடத்தில் உள்ள அதிநவீன கேமராவில் பிடிக்கப்பட்ட படங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் உள்ள லாரியும் அதன் பதிவு எண்கள் வேறு, ஆனால் அபராதம் விதிக்கப்பட்ட எனது லாரியின் பதிவெண்ணும் வேறு. சரியாக கவனிக்காமல் எனது வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பலமுறை நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.

கவனக்குறைவு

இதுபோன்ற கவனக்குறைவுகளால் தவறு செய்யாத பல லாரி உரிமையாளர்கள் அபராதம் கட்ட நேர்கிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அதனால் செயலிகள் அனுப்பும் படங்களை நன்கு கவனித்து விதிமீறிய வாகனங்களுக்கு சரியாக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story