நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ அணைப்பு
நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் திருக்கட்டளை ரோட்டில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மள மளவென பரவியது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடர்ந்து போராடினர். இந்த நிலையில் நேற்று காலை தீ ஓரளவு அணைக்கப்பட்டது. குப்பை கிடங்கில் தீப்பிடித்த இடத்தில் இருந்து புகைமட்டும் வெளியேறியது. இதனால் அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது. இருப்பினும் தீ மேலும் பரவாமல் தடுக்க அதன் அருகே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் தீ விபத்து ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
Related Tags :
Next Story