சவுண்ட் சர்வீஸ் கடையில் தீ விபத்து
அரக்கோணத்தில் சவுண்ட் சர்வீஸ் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் ஆன்ட்ரசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். அதேப்பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவர் வழக்கம் போல கடந்த சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் கடையில் இருந்து புகை வந்து கொண்டிருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, அரக்கோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போதி தீ எரிந்துகொண்டிருந்தது. சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கடையில் இருந்த மூங்கிலால் ஆன அலங்கார பொருட்கள் எரிந்து கருகியது. இந்த தீ விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story