பட்டாசு ஆலை அதிபர் வீட்டில் தீ விபத்து
மின்கசிவால் பட்டாசு ஆலை அதிபர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
சிவகாசி,
மின்கசிவால் பட்டாசு ஆலை அதிபர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
தீவிபத்து
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் குருவையா. இவர் பட்டாசு ஆலை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு தேவையான அட்டை பெட்டிகளை தனது வீட்டின் மேல் மாடியில் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகள் மற்றும் பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. நள்ளிரவு வீட்டின் தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மின் கசிவு
உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை போராடி அணைத்தனர்.
இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து நடந்த வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.