முட்புதரில் திடீர் தீ விபத்து
முட்புதரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர்
கரூர் மாவட்டம், பழைய புகழூர் தாசில்தார் அலுவலகத்திற்கு பின்புறம் ஏராளமான செடி, கொடிகளும், சீமை கருவேல மரங்களும் முளைத்து புதர் போல் இருந்தது. இந்நிலையில் முட்புதரில் ேநற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து, வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story