மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ விபத்து


மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ விபத்து
x

விருதுநகர் அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூலப்பொருட்கள் சேதமாகின.

விருதுநகர்


விருதுநகர் அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூலப்பொருட்கள் சேதமாகின.

பட்டாசு ஆலை

விருதுநகர் அருகே குப்பாம்பட்டி அருகில் சிவகாசியை சேர்ந்த தேசிங்குராஜா (வயது 45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசுஆலையில் 60 அறைகள் உள்ளன.

இதில் 45 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் வேலைக்கு யாரும் வரவில்லை. இதையடுத்து மாலை 6 மணிக்கு திடீரென மின்னல் தாக்கியது. இதனால் மூலப்பொருட்கள் இருந்த அறையில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

பொருட்கள் சேதம்

அறையில் இருந்த மூலப்பொருட்கள் சேதமடைந்து விட்டது. இதுபற்றி சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமீப காலமாக பட்டாசு ஆலைகளில் இடி, மின்னல் காரணமாக தீ விபத்துக்கள் ஏற்படுவது அதிகமாகி வருகிறது.

இதனை தவிர்ப்பதற்கு வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். அதனை பட்டாசு ஆலைகளும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story