பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடையில் தீவிபத்து
தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடையில் தீவிபத்து ஏற்பட்டத்தில் பொருட்கள் சேதமடைந்தன.
தூத்துக்குடி
தூத்துக்குடி ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன், தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அந்த கடையில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இது குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story