ஜவுளிக்கடையில் தீவிபத்து
வலங்ைகமானில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான துணிகள், பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
வலங்கைமான்:
வலங்ைகமானில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான துணிகள், பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
ஜவுளிக்கடையில் தீவிபத்து
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் திருமலை என்பவர் தனது வீட்டிற்கு முன்பு ரெடிமேடு மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் பூட்டியிருந்த ஜவுளிக்கடை தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக திருமலைக்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.10 லட்சம் துணிகள் எரிந்து சேதம்
இதுகுறித்து திருமலை உடனடியாக வலங்கைமான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீைய அணைத்தனர்.
ஆனாலும் தீவிபத்தில் கடையில் இருந்த அனைத்து ரெடிமேட் துணிகள் மற்றும் கடையின் பர்னிச்சர் பொருட்கள், கல்லாப்பெட்டியில் வைத்திருந்த இன்சூரன்ஸ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், ரூ.40 ஆயிரம் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இந்த ெபாருட்கள் சேதமதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.