மரக்கிடங்கில் தீ விபத்து


மரக்கிடங்கில் தீ விபத்து
x

மரக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, மரக்கட்டைகள் எரிந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் பீர்பால் நுண்ணுமியான்தெரு பகுதியை சேர்ந்த அசேன் (வயது 37) என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 3 மணியளவில் பூட்டப்பட்டிருந்த மரக் கிடங்கில் இருந்து புகை வருவதாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக அசேன் சென்று பார்த்தபோது மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் நிலைய அலுவலர் முருகன் தலைமையில் இரண்டு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அங்கு இருந்த தேக்கு, பலா, வேங்கை மரசட்டங்கள் தீயில் எரிந்து நாசமாயின. நகராட்சி துணைத் தலைவர் சபியல்லா, நகராட்சி கவுன்சிலர் பர்வீன் பேகம் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் மீட்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story