தைல மரக்காட்டில் தீ விபத்து


தைல மரக்காட்டில் தீ விபத்து
x

தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே தமிழக வனத்தோட்டக்கழகத்திற்கு சொந்தமான தைலமரக்காடு 240 எக்டேரில் உள்ளது. இந்த காட்டில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ நாலா புறமும் பரவ தொடங்கியது. இதையடுத்து புதுக்கோட்டை மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களும் சேர்ந்து தண்ணீரை ஊற்றி சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.


Next Story