மதுவில் விஷம் கலந்து குடித்து மீனவர்


மதுவில் விஷம் கலந்து குடித்து மீனவர்
x

மதுவில் விஷம் கலந்து குடித்து மீனவர்

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடை சேர்ந்தவர் வால்டர் (வயது 65), மீனவர். இவர் தற்போது சாஸ்தான்கரை பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் வால்டர் மதுவில் விஷத்தை கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை குடும்பத்தினர் குளச்சலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வால்டர் இறந்து விட்டதாக தொிவித்தார். இதுகுறித்து வால்டர் மகன் ஜாண்சன் டேவிட் (29) குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story