சாயக்கழிவு நீர் கலந்ததால் நுரையாக காட்சியளிக்கும் திருமணிமுத்தாறு


சாயக்கழிவு நீர் கலந்ததால் நுரையாக காட்சியளிக்கும் திருமணிமுத்தாறு
x

சாயக்கழிவு நீர் கலந்ததால் திருமணிமுத்தாறு நுரையாக காட்சியளிக்கிறது.

சேலம்

சேலம் திருமணிமுத்தாறில் அடிக்கடி சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து செல்வதை தடுக்க விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் சேலத்தில் பலத்த மழை பெய்தது. இதை பயன்படுத்தி ஒரு சில சாயப்பட்டறையில் இருந்து சாயக்கழிவுகள் திருமணிமுத்தாறில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் உத்தமசோழபுரம் அருகே திருமணிமுத்தாற்று சாயக்கழிவு நீருடன் கலந்து நுங்கும், நுரையுமாக காணப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, 'மழை காலங்களில் ஒரு சில சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீர் திருமணிமுத்தாறில் திறந்து விடப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்கள்.


Next Story