செஞ்சிக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து குப்பை தொட்டியில் போட்ட வெளிநாட்டு தம்பதி


செஞ்சிக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து குப்பை தொட்டியில் போட்ட வெளிநாட்டு தம்பதி
x

செஞ்சிக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து குப்பை தொட்டியில் போட்ட வெளிநாட்டு தம்பதிக்கு பாராட்டு குவிகிறது.

விழுப்புரம்

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பழமைவாய்ந்த செஞ்சிக்கோட்டை உள்ளது. இங்குள்ள வரலாற்று சின்னங்களை பார்த்து ரசிக்க தினந்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலம் மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

செஞ்சிக்கோட்டையை சுற்றிப்பார்க்க வரும் சிலர் பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பை உள்ளிட்டவற்றை முறையாக குப்பை தொட்டியில் போடாமல் கோட்டை வளாகத்தில் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் செஞ்சிக்கோட்டையை சுற்றிப்பார்த்த ஒரு வெளிநாட்டு தம்பதியர், ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். பின்னர் அதனை அங்குள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள், இவர்களை பார்த்தாவது திருந்துங்கள்....செஞ்சிக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்களை வீசாதீர்கள் என்று பதிவிட்டுள்ளனர். அதே சமயம் வெளிநாட்டு தம்பதியை பாராட்டியும் பதிவிடுகிறார்கள்.



Next Story