கோவிலில் மாலைமாற்றி காதலை வெளிப்படுத்திய வெளிநாட்டு தம்பதி
தமிழ் கலாசாரப்படி வெளிநாட்டு தம்பதி கோவிலில் மாலைமாற்றி காதலை வெளிப்படுத்தினர்.
திருப்பத்தூர்
ஸ்பெயின் நாட்டிலிருந்து 4 ஆண்கள் உள்பட 15 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஏழரைப்பட்டி கிராமத்திற்கு வந்தனர். அப்போது அங்குள்ள கோவிலில் ஒரு தம்பதி தமிழ் கலாசாரப்படி மோதிரம் மற்றும் மாலை மாற்றி தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் அவர்களுடன் வந்திருந்த பெண்கள் அனைவரும் இந்திய கலாசாரப்படி சேலை அணிந்து, தலையில் பூக்கள் சூடியும், ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும் இருந்தனர். மாலை மாற்றிக்கொண்ட பிறகு உணவு விருந்து நடைபெற்றது. இதில் வெளிநாட்டினருடன், கிராம பொதுமக்களும் பங்கேற்றனர். அவர்கள் மாலை மாற்றிக்கொண்ட தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தங்கள் செல்போன்களில் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story