மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி-2 வாலிபர்கள் படுகாயம்
ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
விவசாயி பலி
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48). விவசாயியான இவர், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். டி.சுப்புலாபுரத்தில், தேனி-மதுரை சாலையில் வந்தார். எதிரே மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சேவாக் (24), சஞ்சய் (25) ஆகிய 2 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், மோட்டார் சைக்கிள்களில் இருந்து வேல்முருகன், சேவாக், சஞ்சய் ஆகிய 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில், படுகாயம் அடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் சேவாக், சஞ்சய் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது உயிருக்கு போராடிய சேவாக், சஞ்சய் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.