கலெக்டர் எஸ்.சிவராசு பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்


கலெக்டர் எஸ்.சிவராசு பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்
x

கலெக்டர் எஸ்.சிவராசு பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி:

திருச்சி மாவட்ட கலெக்டராக எஸ்.சிவராசு பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் இவருடைய பெயரில், புகைப்படத்துடன் 6378370419 என்ற வாட்ஸ்-அப் மூலம் பொதுமக்களிடமும், அரசு அலுவலர்களையும் ஒரு கும்பல் ஏமாற்றி பணம் பறித்து மோடி செய்வதாக கலெக்டருக்கு புகார் வந்தது. அவர்கள், வங்கி கணக்கு மூலமும், அமேசான், வாட்ஸ்-அப் போன்ற செயலிகள் மூலமும் ஆன்-லைன் வாயிலாக அன்பளிப்பு அட்டைக்கு பணம் செலுத்தக்கூறி செய்திகளை அனுப்பி பணம் பறித்து வருவதாக தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும், தனது பெயரில், புகைப்படத்துடன் 6378370419 என்ற எண் உள்பட போலியாக உருவாக்கப்பட்ட வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து பணம் கேட்பவர்களுக்கு பணம் அளிக்க வேண்டாம் என்றும், அவ்வாறு யாராவது கேட்டால் அதுபற்றி பொதுமக்களும், அரசு அலுவலர்களும் போலீசில் புகார் தெரிவிக்கும்படியும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story