போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு சிறுமி காணாமல் போனதாக அவளது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், அந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெரம்பலூர் சாமியப்பா நகரை சேர்ந்த நந்தகுமார்(வயது 45) மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்திரவின்பேரில் பெரம்பலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அழகம்மாள், போலீஸ் ஏட்டு செல்வராணி ஆகியோர், நந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தவழக்கில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.