நிறைமாத கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது


நிறைமாத கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
x

நிறைமாத கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள மருவூரை சேர்ந்தவர் தினகரன். இவருடைய மனைவி புவனாமேரி(வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு சம்பவ இடத்திற்கு சென்று புவனாமேரியை அழைத்துக்கொண்டு தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரியை நோக்கி புறப்பட்டது. சிறிது தூரத்திலேயே புவனாமேரிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக் பாபு சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார். தொடர்ந்து கர்ப்பிணி பெண் புவனாமேரிக்கு அவசர மருத்துவ உதவியாளர் மனோஜ் உடனடியாக பிரசவம் பார்த்தார். இதில் புவனாமேரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயையும், சேயையும் அருகில் உள்ள திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.


Next Story