நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மீது இளம்பெண் புகார்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மீது இளம்பெண் புகார்
x

ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மீது இளம்பெண் புகார் அளித்தார்

திருநெல்வேலி

பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் விஷ்ணுவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில், ''நானும், ஏர்வாடி பகுதியை சேர்ந்த வாலிபரும் கடந்த 10 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்தோம். பின்னர் கணவன் -மனைவி போல் வாழ்ந்து வந்தோம். அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்தநிலையில் எனக்கு தெரியாமல் சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதுபற்றி கேட்டால் திருமணம் ஆகவில்லை என்று கூறி என்னை ஏமாற்றிவிட்டார். மேலும் என்னை திருமணம் செய்து கொள்ளவும் மறுக்கிறார். இதுபற்றி கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். அவருடைய மாமா ஒருவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் நாங்கள் தனிமையில் இருந்தபோது அவரது செல்போனில் பலமுறை ஆபாசமாக படம் பிடித்து வைத்துள்ளதை கொண்டு மிரட்டி வருகிறார். இதே போல் அவர் ஏராளமான பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி மயக்கி, படம் பிடித்து மிரட்டி நாசம் செய்து வருகிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.


Next Story