அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமான கோரிக்கை
திருவள்ளூர் அருகே அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்கிய. இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் டானியா என்ற மகள் உள்ளார்.
இந்த சிறுமி அரியவகை முக சிதைவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமிக்கை சிகிச்சை அளித்தும் பாதிப்பானது சரியாக வில்லை.
இந்த நிலையில் முகம் அறுவை சிகிச்சை செய்ய முதல்-அமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கூறுகையில்,
மகளுக்கு 3 வயது இருக்கும் போது கண்ணத்தில் சிறு பள்ளி காணப்பட்டது. அது ரத்த கட்டு என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம். ஆனால் இன்று வரை குணமாகவில்லை.
மருத்துவமனைக்கு சென்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பணம் அதிகமாக கேட்கின்றனர். அந்த அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை. மகளின் சிகிச்சைக்கு முதல்-அமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தாா்.
இந்த நிலையில் அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.