அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறு​மி - நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்


அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறு​மி - நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர்
x

சிறுமி டான்யாவிற்கு 9 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினரால், முக அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

சென்னை,

ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி டான்யா. முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிற்கு 9 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினரால், முக அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

இந்நிலையில், தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டான்யாவை, பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தொடர்ந்து, பேசிய அமைச்சர் சிறு​மியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு படிப்பு மற்றும் குடும்பத்தினரின் குறைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், சிறுமிக்கு வில்லிவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


Next Story