அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம்


அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம்
x

ஆலடிக்குமுளை ஊராட்சியில் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் மற்றும் மாணவர்களின் பெயரில் ரூ.2 ஆயிரம் தபால் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்

கரம்பயம்:

ஆலடிக்குமுளை ஊராட்சியில் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் மற்றும் மாணவர்களின் பெயரில் ரூ.2 ஆயிரம் தபால் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆலடிக்குமுளை அரசு பள்ளி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளை ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளில் தற்போது 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.

இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு, பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவை இணைந்து புதிய முயற்சிகளை செய்து வருகின்றனர்.

ங்க நாணயம்

அந்த வகையில் கடந்த ஆண்டு இந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது பெயரில் தபால் நிலையத்தில் புதிதாக கணக்கு தொடங்கப்பட்டு அதில் ஒவ்வொருவருக்கும் தலா 1,000 செலுத்தப்பட்டது..

இந்த ஆண்டு புதிதாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பெயரில் தபால் நிலையத்தில் கணக்கு ெதாடங்கி ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும். அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்கும் பெற்றோருக்கும் குலுக்கல் முறையில் ஒரு நபருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வீதம் 4 பேருக்கு தங்க நாணயம் வழங்கப்படும்.

ஆட்டோ மூலம் பிரசாரம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் பரிசு தொகை வழங்கப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கு ரூ. 5 ஆயிரம் வழங்குவது என்று தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சி குழு, பெற்றோர் ஆசிரியர் குழு, பள்ளி மேலாண்மை குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த பரிசு விவரங்களை ஆலடிக்குமுளை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஆட்டோ மூலம் பிரசாரம் செய்து மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி வருகின்றனர்.


Next Story