வேடசந்தூர் அருகே சாலையோரத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்
வேடசந்தூர் அருகே சரக்கு வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல்
சேலத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் அருகே சீத்தமரம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் பால் நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்தது. மூலப்பொருட்களை பால் நிறுவனத்தில் இறக்கி விட்டு, அந்த வேன் மதுரையை நோக்கி புறப்பட்டது. வேனை சேலத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 25) என்பவர் ஓட்டினார்.
வேடசந்தூர் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள அய்யனார் கோவில் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று, மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேல் வேனை திடீர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் சக்திவேல் காயமின்றி உயிர்தப்பினார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story