பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பஸ்; பயணிகள் அவதி


பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பஸ்; பயணிகள் அவதி
x
தினத்தந்தி 18 Sept 2023 2:30 AM IST (Updated: 18 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

செங்குறிச்சியில் அரசு பஸ் பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணியில் இருந்து நத்தம் நோக்கி நேற்று மதியம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. செங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகில் அந்த பஸ் வந்தபோது, திடீரென்று பஸ்சின் முன்பக்க ஆக்சில் உடைந்து பழுதானது. இதனால் அந்த பஸ் நடுரோட்டில் நின்றது. இதையடுத்து அந்த பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்தனர். பின்னர் அவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் நத்தம் பணிமனையில் இருந்து ஊழியர்கள் வந்து, பஸ்சின் பழுதை சரிசெய்தனர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலுடனும், பழுதடைந்த நிலையிலும் இயக்கப்படுகிறது. இதனால் அதில் பயணிக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அவசரத்திற்காக செல்லும் போது இதுபோன்று பஸ்கள் பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே பஸ்களின் பழுதை சரிசெய்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story