டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற அரசு பஸ்


டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற அரசு பஸ்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:30 AM IST (Updated: 2 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற அரசு பஸ்சால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்


திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல்லுக்கு நேற்று மதியம் ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ் திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் வந்த போது, திடீரென டயர் வெடித்தது. இதையடுத்து அதற்குமேல் அரசு பஸ்சை இயக்க முடியாமல் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி பஸ்நிலையத்துக்கு நடந்து சென்றனர்.

இதற்கிடையே அரசு பஸ், நடுரோட்டில் நின்றதால் பிற வாகனங்களால் செல்ல முடியவில்லை. மதுரை சாலை, நத்தம் சாலை பகுதிகளில் இருந்து வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் அணிவகுத்து நின்றன. மேலும் அரசு பஸ்கள், பஸ் நிலையம் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இருசக்கர வாகனங்கள், கார்கள் போட்டி போட்டு சாலை ஓரத்தில் சென்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நாகல்நகர் ரெயில்வே மேம்பாலம் முதல் ரவுண்டானா வரை சாலையில் இருபக்கங்களிலும் வாகனங்கள் நின்றன. இதற்கிடையே போக்குவரத்து ஊழியர்கள் விரைந்து வந்து வெடித்த டயரை கழற்றி புதிய டயரை மாற்றினர். இதனையடுத்து அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதன்பின்னரே நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் வாகன போக்குவரத்து சீரானது.



Related Tags :
Next Story