திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவி
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவிக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
வேலூர்
அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இடையே கலைத்திறன் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வசந்தநடை நடுநிலைப்பள்ளி மாணவி சுஜித்ரா முதலிடம் பெற்றார். அவருக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முதல் பரிசு வழங்கினர். மேலும் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான கலை விழா போட்டிகளில் 11 முதல் பரிசுகளுடன் மொத்தம் 23 பரிசுகளை மாணவ- மாணவிகள் வென்றனர். நிகழ்ச்சியின் போது கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story